search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சரவை"

    • பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
    • திறமையான மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.

    புதுடெல்லி:

    பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும்.

    இந்தத் திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும்.

    தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

    இந்நிலையில், வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மந்திரி அஸ்வினி, நாட்டில் எந்தவொரு இளைஞரும் தரமான உயர்கல்வியை தொடர்வதை நிதி பிரச்சனைகள் தடுக்கக் கூடாது என்பதற்கான திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.

    • கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    • குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கடுகு மற்றும் கொண்டைக் கடலைக்கான எம்.எஸ்.பி. முறையே குவிண்டாலுக்கு ரூ.5,950 ஆகவும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடுகு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300, கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு 210 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 275 உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ.6,700-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    பார்லி குவிண்டாலுக்கு ரூ.130 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.1,980 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    குங்குமப்பூ குவிண்டாலுக்கு ரூ.140 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.5,940 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    • ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாளுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும்.
    • ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

    மொத்தம் 11.72 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.2.028.57 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதன்மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

    அதன்பின், 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வங்காளம், மராத்தி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    சிறப்பு மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

    • சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
    • வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.

    சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.

    இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

    2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    • பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
    • பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது

    பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமி லேயா்) எதுவும் கொண்டுவரப்படாது என நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவானது இறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில்,

    அண்மையில் உச்சநீதிமன்றத்த்தில் தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் என்.டி.ஏ தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

    அந்த வகையில், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் ஆனால் அந்த இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது. இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அந்த தீர்ப்பில். சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேறிய மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இட ஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுத்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • புதுமுகங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு பாராளுமன்ற விவகாரத்துறையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக மோடி நேற்று முன்தினம் பிரதமராக பதவியேற்றார்.

    அவருடன் 30 கேபினட் மந்திரிகள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 36 ராஜாங்க மந்திரிகள் என மேலும் 71 பேரும் மத்திய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

    பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜ.க.வில் இருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து மந்திரிகள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இன்று காலை முதல் பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

    ரெயில்வே அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்றுக்கொண்டார்.

    சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சராக பூபேந்தர் யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்தின் இணை அமைச்சராக கிர்த்தி வர்தன் சிங் பொறுப்பேற்றார்.

    வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    மத்திய மந்திரிகளுக்கான இலாகா ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

    பிரதமர் மோடி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களையும் கவனிப்பார்.

    கேபினட் மந்திரிகளில் முக்கியமாக முந்தைய மந்திரி சபையில் முக்கிய இடம் வகித்த ராஜ்நாத் சிங் (ராணுவம்), அமித்ஷா (உள்துறை, கூட்டுறவு), நிர்மலா சீதாராமன் (நிதி, கார்பரேட் நலன்), நிதின் கட்காரி (சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்), ஜெய்சங்கர் (வெளியுறவு). பியூஸ் கோயல் (வர்த்தகம் மற்றும் தொழில்) ஆகியோர் அந்தந்த துறைகளை தக்க வைத்து உள்ளனர்.

    இதைப்போல தர்மேந்திர பிரதான் (கல்வி), சர்பானந்தா சோனோவால் (நீர்வழி, துறைமுகங்கள்), அஸ்வினி வைஷ்ணவ் (ரெயில்வே, ஒளிபரப்பு, தகவல் தொழில்நுட்பம்), ஜூவல் ஓரம் (பழங்குடியினர் நலன்), பூபேந்திர யாதவ் (சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு), ஹர்தீப் சிங் புரி (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு). வீரேந்திர குமார் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்) ஆகியோருக்கும் முந்தைய துறைகளே ஒதுக்கப்பட்டு உள்ளன.

    புதுமுகங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறைகள் பெற்று இருக்கிறார். மனோகர் லால் கட்டார் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைகளுக்கு மந்திரி ஆகியிருக்கிறார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் உருக்குத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஜிதன் ராம் மஞ்சி சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை பெற்றுள்ளார்.

    ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறையும், ராம் மோகன் நாயுடுவுக்கு சிவில் விமான போக்குவரத்து துறையும், சிராக் பஸ்வானுக்கு உணவு பதப்படுத்தல் துறையும், சி.ஆர். பாட்டீலுக்கு ஜல்சக்தி துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    முந்தைய ஆட்சியில் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த கிஷன் ரெட்டி தற்போது நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையை பெற்று இருக்கிறார். மேலும் சுகாதாரத்துறையை கவனித்த மன்சுக் மாண்டவியா தற்போது தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைகளுடன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையையும் பெற்றுள்ளார்.

    இதைப்போல உணவு பதப்படுத்துதல், சட்டம் உள்ளிட்ட துறைகளை முந்தைய ஆட்சியில் கவனித்த கிரண் ரிஜிஜுவுக்கு தற்போது பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    ஜல்சக்தி துறை மந்திரியாக இருந்த கஜேந்திர சிங் செகாவத் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாகி இருக்கிறார். கல்வித்துறை இணை மந்திரியாக இருந்த அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கேபினட் பொறுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    சிவில் விமானப்போக்குவரத்து மந்திரியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு துறையும், கால்நடைத்துறை மந்திரியாக இருந்த கிரிராஜ் சிங்குக்கு ஜவுளித்துறையும், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்த பிரகலாத் ஜோஷிக்கு நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக ஜிதேந்திர சிங் (அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள்), அர்ஜுன் ராம் மெக்வால் (சட்டம் மற்றும் நீதி) ஆகியோர் ஏற்கனவே வகித்த இலாகாக்களை பெற்று உள்ளனர்.

    ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு பாராளுமன்ற விவகாரத்துறையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளாவில் பா.ஜ.க.வை கொண்டு சேர்த்த நடிகர் சுரேஷ் கோபிக்கு சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    • அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக பா.ஜ.க தலைமைக்கு சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
    • கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் மத்திய அமைச்சராக நடிகரும், திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பியுமான சுரேஷ் கோபியும் பதவியேற்றுக்கொண்டார்.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    "பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றவே விரும்புகிறேன். அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அமைச்சர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் எனினை விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்."

    "திருச்சூர் தொகுதி மக்கள் என்னை நன்கு அறிவர். பாராளுமன்ற உறுப்பினராக நான் சிறப்பாக செயல்படுவேன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். கட்சியே முடிவை எடுக்கட்டும்," என்று தெரிவித்தார்.

    கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வாரியான மந்திரி பதவிகள் விவரம் வருமாறு:-

    பா.ஜனதா - 61

    தெலுங்குதேசம் - 2 (கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மசானி)

    ஐக்கிய ஜனதா தளம் - 2 (ராம்நாத் தாக்குர், பி.எல்.வெர்மா)

    சிவசேனா (ஷிண்டே) - 1 (பிரதாப்ராவ் ஜாதவ்)

    ஜனதா தளம் (எஸ்) - 1 (எச்.டி.குமாரசாமி)

    இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 1 (ஜித்தன் ராம் மஞ்சி)

    இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) - 1 (ராம்தாஸ் அத்வாலே)

    லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) - 1 (சிராக் பஸ்வான்)

    ராஷ்டிரீய லோக் தளம் - 1 ஜெயந்த் சவுதாரி)

    அப்னா தளம் - 1 (சந்திரசேகர் சவுதாரி)

    மாநில வாரியாக மந்திரிகள் எண்ணிக்கை:

    உத்தரபிரதேசம் - 10

    பீகார் - 8

    மகாராஷ்டிரா - 6

    குஜராத் - 5

    கர்நாடகா - 5

    மத்திய பிரதேசம் - 5

    ராஜஸ்தான் - 4

    ஜார்கண்ட் - 4

    ஆந்திரா - 3

    அரியானா - 3

    ஒடிசா - 3

    மேற்கு வங்காளம் - 2

    கேரளா - 2

    தெலுங்கானா - 2

    அசாம் - 2

    கோவா - 1

    தமிழ்நாடு - 1

    ஜம்மு காஷ்மீர் - 1

    இமாசலபிரதேசம் - 1

    அருணாசலபிரதேசம் - 1

    பஞ்சாப் - 1

    உத்தரகாண்ட் - 1

    டெல்லி - 1

    • பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.
    • இந்த கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ,தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

    பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

    இந்த கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ,தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைய, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் நிபந்தனையற்ற ஆதரவு கடிதம் வழங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    முக்கிய கோரிக்கையாக நிதியமைச்சர் பதவியும் தன் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோருவதாகவும் ஆந்திர மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பது நாயுடுவின் பிரதான கோரிக்கை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் எனவும் 3 மத்திய அமைச்சர்கள் மற்றும் 2 இணை அமைச்சர்கள் பொறுப்பை வழங்கவேண்டும் எனவும் நிதிஷ் குமார் கோரிக்கை விடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2014க்குப் பிறகு மீண்டும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது
    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வென்றுள்ளது.
    • இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியை சந்தித்து அளிக்கிறார்.

    ×